துர்க்கையம்மன் புகழை சொல்ல வரும் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா
காளையப்பா பிக்சர்ஸ் கே.ஜி.காளையப்பன் வழங்க ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “மேற்கு முகபேர் ஸ்ரீகனக துர்கா”
இந்த படத்தில் புதுமுகங்கள் மகி,சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் நாயகிகளா நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் டெல்லிகணேஷ் டி.பி.கஜேந்திரன் நடிக்கிறார்கள்...மற்றும் நதியாஸ்ரீ, வைகை கவிதா, ராகவி, சுஷ்மிதா,ஸ்ரீஹரி, பிரதீப், ஜெனிபர் ஆகியோருடன் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்கிறார்கள்.
இப்பொழுது சாமி படங்கள் தயாரிப்பு குறைந்து விட்டது. பேய் படங்களை மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் துணிந்து சாமிபடமாக இந்த மேற்கு முகபேர் ஸ்ரீ கனகதுர்கா படத்தை எடுத்துள்ளோம். ஜாதகத்தில் தோஷம் இருக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால் தோஷம் அவர்களை படாத பாடு படுத்தி விடுகிறது...வி...
