Thursday, September 10
Shadow

Tag: த. மா. தியாகராசன்

இசை கலைஞர் த. மா. தியாகராசன் பிறந்த தின பதிவு

இசை கலைஞர் த. மா. தியாகராசன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
டி. எம். தியாகராஜன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞராவார். இவர் தஞ்சாவூரில் பிரபலமான இசை நாட்டிய விற்பன்னர்களின் வழித்தோன்றலாவார். அவரது பாட்டனாரும், கொள்ளுப் பாட்டனாரும் பரோடா  அரண்மனையின் ஆஸ்தான வித்துவான்களாக இருந்துள்ளனர். தற்போது இந்தக் குடும்ப உறுப்பினர் வதோதராவில் தஞ்சோர்கார் என்ற பெயரோடு வாழ்ந்து வருகிறார்கள். இவரது தந்தை மகாலிங்கம் பிள்ளை ஒரு மிருதங்க வித்துவான். தாயார் சீதாலட்சுமி அம்மாள். தியாகராஜன் முதலில் தனது தந்தையிடம் இசை பயின்றார். பின்னர் செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் குருகுல முறையில் மாணாக்கரானார். தியாகராஜன் தனது எட்டாவது வயதில் முதலாவது இசைக் கச்சேரி செய்தார். அதனைக் கேட்டு மிகவும் ஆனந்தம் அடைந்த தாளவாத்திய விற்பன்னரான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை கச்சேரி முடிந்ததும் தியாகராஜனைத் தமது இரு கைகளிலே தூக்கி தமது பாராட்டைத் தெரிவித்தார். டி. எ...