Thursday, September 10
Shadow

Tag: நமது -திரைவிமர்சனம்

நமது -திரைவிமர்சனம்

நமது -திரைவிமர்சனம்

Review
சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார் மோகன்லால். இவரது மனைவி கௌதமி, இல்லத்தரசி. இவர்களது மகன் விஷ்வாந்த் கல்லூரியிலும், மகள் ரைனா ராவ் பள்ளியிலும் படிக்கிறார்கள். இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. தனித்தனியாக பயணிக்கும் இந்த 4 கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் முடிவதுதான் ‘நமது’ படம். சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக இருந்துகொண்டு, புரோமோஷன் கிடைப்பதற்காக படும்பாட்டை மோகன்லால் இந்த படத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக அவர் பொருந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், டப்பிங்கில் மோகன்லாலின் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் நிறைய மலையாள சாயல் இருக்கிறது. 100 ரூபாய்க்கும் குறைவாக மளிகை சாமான் எங்கு விற்பனையாகும் என்று ரூ.500 செலவழித்து தேடிப்போய் வாங்குமளவுக்கு ரொம்பவும் அப்பாவித...