அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’
சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' படத்திற்கு 'ஹிப் பாப் தமிழா' ஆதி இசை அமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்து அதர்வா, நயன்தாரா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' என்ற படத்திற்கு இசை அமைக்க உள்ளார் ஆதி. மாயா படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. 'ஹிப் பாப் தமிழா' ஆதியும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் இப்படத்தின் கம்போசிங்கை விரைவில் துவங்கவிருக்கிறார்கள்.
திருடன் போலீஸ், ஒருநாள் கூத்து ஆகிய படங்களைத் தயாரித்த 'கேமியோ ஃபிலிம்ஸ்' இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனம் இதுவரை தயாரித்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியலாக வெற்றிபெற்றதில்லை. தொடர்ந்து நஷ்டப்பட்டதால் பக்கா கமர்ஷியல் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதர்வா, நயன்தாரா இருவருக்கும் பெரிய சம்பளம் கொடுத்து இந்தப் படத்தில் புக் பண்ணியுள்ளனர். இது அதர்வாவும், நய...
