பப்பி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
மிகவும் சீரியஸ் படங்களாக பார்த்து வந்த நம்ம தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக மிகவும் யூத்தான ஒரு கதைக்களத்தோடு வெளியாகி உள்ளது "பப்பி". இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
அறிமுக இயக்குனர் நட்டு தேவ். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தை வருண் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவரின் யதார்த்தமான ஒரு யூத்துக்கு உண்டான துள்ளலோடு சிறப்பாக நடித்துள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர் கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே பிலிம்பேர் சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டி சென்றவர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காமெடி கலந்த சென்டிமெண்ட் படத்தில் கலக்கியுள்ளார் யோகி பாபு என்றே சொல்ல வேண்டும். அவர் கிட்ட தட்ட அனைத்து படங்களிலும் நடித்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே அவரின் காமெடிய...
