Sunday, April 19
Shadow

Tag: #பாரதிராஜா

மறைந்த மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா அஞ்சலி

மறைந்த மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா அஞ்சலி

Latest News, Top Highlights
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு சினிமா துறை பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறனர். நடிகர் பார்த்திபன், வைரமுத்து, நடிகை சுகாசினி ஆகியோர் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ள நிலையில், சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்....
படைவீரன் – திரைவிமர்சனம் (3/5)

படைவீரன் – திரைவிமர்சனம் (3/5)

Review, Top Highlights
நாயகன் விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவர் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழகி வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் யேசுதாஸ் அவரது உறவுக்கார பெண்ணான நாயகி அம்ரிதாவை காதலித்து வருகிறார். அதேநேரத்தில் போலீஸ் வேலை மீது விஜய் யேசுதாஸுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. போலீஸானால் மரியாதை கிடைக்கும், சாப்பாடு, சரக்கு என ஜாலியாக இருக்கலாம் என்ற ஆசையில் போலீசாக முயற்சி செய்கிறார். அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார். அவரும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விஜய்க்கு உதவி செய்து, தேர்வில் தேர்ச்சி பெற வைக்கிறார். பிறகு பயிற்சியில் மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக போலீசாகி விடுகிறார். ஆனால், பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேய...
ஹெச்.ராஜாவால் வைரமுத்து போல் இலக்கியம் எழுத முடியுமா? பாரதிராஜா கேள்வி

ஹெச்.ராஜாவால் வைரமுத்து போல் இலக்கியம் எழுத முடியுமா? பாரதிராஜா கேள்வி

Latest News, Top Highlights
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்த பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மிகக் கேவலமாக இழிவாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில் வைரமுத்து அமைதி காக்கிறார். அவருக்கு ஆதரவான கட்சிகள் அமைதி காக்கின்றன. திரையுலகம் அமைதி காக்கிறது. ஆனாலும், சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு அளித்துள்ளார். வைரமுத்துவை விமர்சித்து வரும் எச்.ராஜாவுக்கு தனது கண்டனங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தனி மனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாக...