விஸ்வாசம் படத்திற்கு கிடைத்த பாராட்டால் மகிழ்ச்சி அடைந்த பட குழுவினர்
அஜித்தின் விஸ்வாசம் படம் 2019ம் ஆண்டின் மிகப் பெரிய ஹிட் படம். இந்த படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், பாராட்டும் இன்னும் வேறெந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்று கூறலாம்.
குடும்பங்களை பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கிற்கு கொண்டு வந்த படம் என்று பெருமை விஸ்வாசம் படத்திற்கு உள்ளது. இதில் இடம்பெற்ற கண்ணான கண்னே பாடல் செம ஹிட்.
இப்பாடல் குறித்து ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசும்போது, அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலில், பாடலாசிரியல் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்து பயன்படுத்தி இருப்பது பாராட்டக்குரியது. இப்படி தாமரை பயன்படுத்திய வசீகரா, கலாபக்காதலன் போன்ற பழைய சொற்களை கூறி பாராட்டி பேசியிருக்கிறார்.
இது விஸ்வாசம் குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது....
