முதல் முறையாக ஒரு நகைசுவை கதையை எடுத்துள்ளேன் இயக்குனர் மிஸ்கின்
மனிதனின் வாழ்க்கையில் கத்தியின் கதாபாத்திரம் என்ன??? மனிதனின் அன்றாட வேலை பலுவை குறைக்கும் நோக்கத்தில் தான் கத்தி உருவாக்கப்பட்டது... ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்ற செயல்களுக்கும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.... இது ஒரு புறம் இருந்தாலும், நாம் யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாத கத்தியின் மறுபுறம் இருக்கிறது.... அது தான் சிகை அலங்கார கலைஞர்களின் 'சவரக்கத்தி'. அத்தகைய சவரக்கத்தியை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான், மிஷ்கின் கதை எழுதி, 'லோன் உல்ப் புரொடக்ஷன்' சார்பில் தயாரித்து இருக்கும் 'சவரக்கத்தி'. ஜி ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சவரக்கத்தி' திரைப்படத்தில் இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவெடுத்து இருக்கும் 'சவரக்...
