கலை இயக்குனர் ரெமியன் பிறந்த தின பதிவு
பாண்டிசேரியில் பிறந்த ரெமியன், அறிந்து அறியாமலும், பட்டியல், தேவன், அலை, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
“திட்டம் போட்டு திருடுற கூட்டம்”. ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போலவே, சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை கலை இயக்குனர் ரெமியன் அழகாக தன்னுடைய மனதில் களவாடி, சென்னை அருங்காட்சியகம் போலவே ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை நுங்கம்பாக்கத்தில் அமைத்து இருக்கிறார். எப்படிப்பட்ட வடிவமைப்பையும் கனகச்சிதமாக படப்பிடிப்பு களத்தில் உருவாக்கி தரும் கலை இயக்குனர் ரெமியன், ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பான பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர் பணியாற்றிய படங்கள்: புன்னகை தேசம், அறிந்து அறியாமலும், பட்டியல், தேவன், அலை, நினைத்தாலே இனிக்கும், சிங்கம் புலி, கழுகு...
