Sunday, June 21
Shadow

Tag: #விஜய் யேசுதாஸ்

நடிகர் விஜய் யேசுதாஸ் பிறந்த தின பதிவு  

Birthday, Top Highlights
விஜய் யேசுதாஸ் கட்டசேரி தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார். விஜய் யேசுதாஸ் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பிரபாவிற்கு இரண்டாவது மகனாக சென்னையில் மார்ச் 23,1979 அன்று பிறந்தார். சனவரி 21, 2007 அன்று தமது நீண்டநாள் நண்பர் தர்சனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்தார். இருவருக்கும் அம்மெயா என்ற மகள் உள்ளனர். இவர் நடித்த படங்கள்  படை வீரன், மாரி இவர் பாடல் பாடிய படங்கள்  வானவராயன் வல்லவரையன், அவன் இவன், கனிமொழி, பொக்கிஷம், அதே நேரம் அதே இடம், கண்ணாமூச்சி ஏனடா, மலைக்கோட்டை, தாமிரபரணி, பட்டியல், திருப்பதி, புதுப்பேட்டை, அது ஒரு கனா காலம், காதல் கொண்டேன், ஜெயம்...
படைவீரன் – திரைவிமர்சனம் (3/5)

படைவீரன் – திரைவிமர்சனம் (3/5)

Review, Top Highlights
நாயகன் விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவர் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழகி வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் யேசுதாஸ் அவரது உறவுக்கார பெண்ணான நாயகி அம்ரிதாவை காதலித்து வருகிறார். அதேநேரத்தில் போலீஸ் வேலை மீது விஜய் யேசுதாஸுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. போலீஸானால் மரியாதை கிடைக்கும், சாப்பாடு, சரக்கு என ஜாலியாக இருக்கலாம் என்ற ஆசையில் போலீசாக முயற்சி செய்கிறார். அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார். அவரும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விஜய்க்கு உதவி செய்து, தேர்வில் தேர்ச்சி பெற வைக்கிறார். பிறகு பயிற்சியில் மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக போலீசாகி விடுகிறார். ஆனால், பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேய...