Tuesday, April 28
Shadow

Tag: விமர்சனம்

கடைசி விவசாயி திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டனின் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். கிராமத்தில் விவசாயியாக வாழும் மாயாண்டிக்கு விவசாயத்தை தவிர வேறெதுவும் தெரியாது. அதே கிராமத்தில் யானையை வைத்து பிழைப்பு நடத்துகிறார் யோகிபாபு. மேலும் வாழ்க்கையில் எதிலுமே நாட்டமில்லாமல் இருக்கிறார் விஜய் சேதுபதி. இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களும் , விவசாயத்தின் அருமையை உணர்த்தும் படமாகவும் உருவாக்கப்பட்டது தான் இந்த கடைசி விவசாயி திரைப்படம். இக்கதையை மிகவும் யதார்த்தமாகவும், ரசிக்கும்படியும் எடுத்துள்ளார் மணிகண்டன். படத்தில் மாயாண்டி என்ற விவசாயியாக நல்லாண்டி என்பவர் நடித்திருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் இவரது நடிப்பு தனியாக தெரிகிறது. அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நல்லாண்டி. மேலும் யானையை வைத்து பிழைப்பு நடத்துபவராக யோகிபாபுவும், வாழ்க...
யாரோ திரை விமர்சனம் 3/5

யாரோ திரை விமர்சனம் 3/5

Latest News, Review
நாயகன் ஜான், ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் கடலோரத்தில் ஒரு மிகபெரும் பங்களாவில் தனியாக வசித்து வருகிறார். இவர் வசிக்கும் அந்த பங்களாவில் யாரோ ஒருவர் தன்னுடன் இருப்பதாக உணர்கிறார் ஜான். அதன் காரணமாக, தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்க்கும்படி சொல்கிறார். அவர்கள் பார்க்கும்போது அங்கு வேறு யாரும் இல்லை எனக் கூறி சென்று விடுகின்றனர். ஒருநாள், தனது வீட்டிற்குள் இருந்து கேமரா ஒன்றை எடுக்கிறார். அந்த வீடியோ கேமராவில், யாரோ ஒருவர் ஒரு பெரியவரை கொலை செய்யும் வீடியோ ஒன்று அதில் இருக்கிறது. இதைக் கண்டதும் ஜான் அதிர்ச்சி அடைகிறார். கொலை செய்யும் நபரின் முகம் அதில் தெரியாமல் இருக்கிறது. இறுதியாக, அந்த வீடியோவில் கொலை செய்த நபர் யார்.? கொலை செய்யப்பட்ட நபர் யார் .?? ஜானை சுற்றி வரும் அந்த மர்ம நபர் யார்.? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும்...
வீரமே வாகை சூடும் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

வீரமே வாகை சூடும் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
விஷால் நடிப்பில் புதுமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள வீரமே வாகை சூடும் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஒரு சாதாரண மனிதன் அசாதாரண சூழ்நிலையை எப்படி கையாண்டு வெற்றிபெறுகிறார் என்பதே இந்த படத்தின் ஒரு வரி கதை. ஒரு அரசியல்வாதிக்கும், சாதாரண மனிதருக்கும் இடையே நடக்கும் போராட்டங்களே வீரே வாகை சுடும் படத்தின் கதை. மிகவும் சிம்பிள் ஆனா கதையை தனது திரைக்கதை மூலம் சூப்பராக எடுக்க முயற்சிசெய்துள்ளார் இயக்குனர் சரவணன். அந்த முயற்சியில் அவர் வென்றாரா என்பதை பார்க்கலாம். ஒரு திரில்லர் படத்திற்கு மிக முக்கியமான ஒன்று திரைக்கதை. அதை இயக்குனர் சரவணன் இப்படத்தில் நன்றாக கையாண்டிருக்கிறார். படத்தில் விஷாலுக்கும் அரசியல் வாதிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. படத்தின் பிளஸ்: திரைக்கதை, யுவன் சங்கர் ராஜா இசை, யோகிபாபு காமடி படத்...

கார்பன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
போனால் போலீஸ் வேலைக்கு தான் போவேன் என்று அடம்பிடிக்கும் மகன், அவரை வெறுக்கும் அப்பா என கார்பன் படத்தின் கதை ஆரம்பமாகிறது. மகனாக வித்தார்த்தும், அப்பாவாக மரிமுத்துவும் நடித்துள்ளனர். இந்நிலையில் வித்தார்த்திற்கு கனவில் வருவதெல்லாம் நிஜத்தில் நடக்கின்றது. எனவே கனவில் வித்தார்தின் தந்தையான மாரிமுத்துவிற்கு விபத்து நடப்பதுபோல் தோன்றியது. பதறிஅடித்துக்கொண்டு வித்தார்த் தன் அப்பாவை காப்பாற்ற போகும் வேளையில் அவருக்கு உண்மையிலேயே அந்த விபத்து நடந்துவிட்டது. இது விபத்தல்ல கொலைமுயற்சி என வித்தார்த்திற்கு தெரியவர இந்த கொலைமுயற்சி ஏன் நடந்தது, தன் அப்பாவை கொலைசெய்ய முயற்சிக்கும் அந்த நபர் யார் என்று தேடிச்செல்கிறார். இறுதியில் இப்பதிலுக்கான விடையை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கார்பன் படத்தின் மீதி கதை. வித்தார்த்தின் 25 வது திரைப்படமான இது அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளது என்றுதான் சொல்...

தேள் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், பிரபுதேவா, சம்யுக்தா, ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தேள் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். கொரியன் படமான PIETA வின் தழுவலாக தமிழில் உருவான திரைப்படம் தான் தேள். கதையின் நாயகனான பிரபுதேவாவிற்கு அவ்வளவு எளிதில் எதையும் புரிந்துகொள்ள இயலாது. இதனால் அவருக்கு எங்கேயுமே வேலைகிடைக்கவில்லை. இறுதியில் ஒரு தாதாவிடம் அடியாளாக வேலைசெய்கிறார். சிறிது காலம் கழித்து குட்டி தாதாவாக பிரபுதேவா உருவெடுக்கும்போது நான் தான் உன் அம்மா என்று ஈஸ்வரிராவ் வருகிறார்.இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் பிரபுதேவா. போக போக ஈஸ்வரிராவின் பாசத்தைப்பார்த்த பிரபுதேவா இவர் தான் தன் அம்மாவாக இருப்பாரோ என்று என்னும் நேரத்தில் ஈஸ்வரிராவ் கொலைசெய்யப்படுகிறார். இறுதியில் ஈஸ்வரிராவ் ஏன் கொலைசெய்யப்பட்டார், அவரை கொலைசெய்தவரை பிரபுதேவா பழிவாங்கின...

கொம்புவச்ச சிங்கம்டா திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Shooting Spot News & Gallerys
நடிகர் சசிகுமார், நடிகை மடோனா செபாஸ்டியன்நடிப்பில் வெளியான ‘கொம்பு வச்ச சிங்கம்டா’படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் ஊரே கொண்டாடி, மரியாதை செய்யும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார் மகேந்திரன். இவரது ஒரே மகன் சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். இதனால் ஊருக்குள் இருக்கும் பல பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. அந்த நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது. இந்தப் பிரச்சினை ஊதி ஊதிப் பெரிதாக்கப்படும் நிலையில் எப்படி ...

நாய் சேகர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
தமிழ் சினிமாவில் நல்ல நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஸ் நாயனாக அறிமுகமாகியிருக்கும் சினிமா நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த சினிமா பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது. அறிமுக இயக்குர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த சினிமாவில் சதீஸ் நாயகனாகவும் பவித்ர லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு, மனோ பாலா, கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோரும் இக்கதைக்கு தங்களது நடிப்பின் மூலம் வலு சேர்த்துள்ளனர். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இப்படத்தில் நடிகராக திரையில் தோன்றி பாடல்கள் பாடி அசத்துகிறார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷை ஜாலியான வில்லனாக காட்டியிருப்பது வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஜார்ஜ் மரியத்தின் ஆராய்சியில் நடந்த குளறுபடியினால் நாய் மனிதனாகவும் மனிதன் நாயாகவும் மாறிவிடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் கலகல கலாட்டாக்களின் ஜாலியான திரைத்தொகு...

பிளான் பண்ணி பண்ணனும் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்திற்கு பிறகு நடிகர் ரியோ நடிப்பில் வெளியாகியிருக்கும் 2வது திரைப்படம். நீண்ட இழுபறிக்குப் பிறகு பல சிக்கல்களை கடந்து ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த படம் பிளான் பண்ணி பண்ணனும். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ரியோவும் பால சரவணனும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து அதற்கு ஒரு நடிகையை விருந்தினராக அழைக்கின்றனர். அந்த நடிகைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணமும், பால சரவணனின் தங்கை 'அராத்தி' பூர்ணிமா ரவியும் காணாமல் போகின்றனர். ரியோவும் பால சரவணனும் பூர்ணிமா ரவியை தேடி செல்கின்றனர். இதையடுத்து பூர்ணிமா ரவி ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்வதற்காக வீட்டிலிருந்து நாயகி ரம்யா நம்பீசனின் உதவியோடு ஓடிவிட்ட உண்மையை இவர்கள் கண்டுபிடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, ரம்யா நம்பீசனை அழைத்துக்கொண்டு ரியோ, பாலசரவணன் இருவரும் ஆனந்தி திருமணத்தை...

ஆனந்தம் விளையாடும் வீடு திரை விமர்சனம் (ரேட்டிங் 2.5/5)

Latest News, Review
நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சிவாத்மிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே காணலாம். ஒரு பெரிய குடும்பத்தில் இருக்கும் அலட்சியங்களையும், அவர்களைப் பிரித்து ஆட்சி செய்ய முயலும் ஒரு எதிரியையும் பற்றிப் பேசும் உங்கள் வழக்கமான குடும்ப ஆக்‌ஷன் நாடகம். பெரிய ஆம்பளை (ஜோ மல்லோரி) இரண்டு மனைவிகளை மணந்தார், அவர்களுக்கு காசி (சரவணன்), முத்துப்பாண்டி (சேரன்), பழனி (விக்னேஷ்), செல்வம் (சௌந்தரராஜன்), தர்மன் (சினேகன்) மற்றும் பலர் உட்பட பல மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். முத்துப்பாண்டியின் வணிக எதிரியான கருப்பன் (சேரன்) சகோதரர்களிடையே அலட்சியத்தை ஏற்படுத்தி அவர்களது குடும்பத்தை அடிக்கடி தொந்தரவு செய்கிறார். பெரிய ஆம்பளையின் இரு மனைவிகளின் மூத்த சகோதரர்களான முத்துப்பாண்டி மற்றும் காசி இருவரும் சேர்ந்து தங்கள் 'மெகா' குடும்பத்திற்கு ஒரு பெரி...

ராக்கி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் வெளியான ராக்கி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். வட சென்னையில் பெரும் ரவுடியான பாரதிராஜாவுக்கும், வசந்த் ரவிக்கும் ஏதோ ஒரு பெரும் பகை. சிறைதண்டனை முடிந்து தன் அம்மா, தங்கையைப் பார்க்க வருகிறார் வசந்த் ரவி. அவரது அம்மா பாரதிராஜாவால் கொல்லப்பட்ட உண்மை தெரிகிறது. தங்கை ரவீணா எங்கு போனார் என்றே தெரியவில்லை. எப்படியோ தங்கையைக் கண்டுபிடித்து போகிறார். அங்கு வந்து ரவீணாவைக் கொல்கிறார்கள் பாரதிராஜா ஆட்கள். பழிக்குப் பழி வாங்க பாரதிராஜாவைத் தேடிப்போகிறார் வசந்த் ரவி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படத்தின் மைன்ஸ்: ஒரே காட்சி, எதற்காக அத்தனை நீளமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. ஆரம்பத்தில் வசந்த் ரவி நடக்கிறார், நடக்கிறார், நடந்து கொண்டே இருக்கிறார். 'பாரதி கண்ணம்மா' சீர...