Tuesday, April 28
Shadow

Tag: விமர்சனம்

ஐங்கரன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகியுள்ள ஐங்கரன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். 2015ல் வெளிவந்த 'ஈட்டி' என்ற விளையாட்டை மையப்படுத்திய விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தை தனது முதல் படமாகக் கொடுத்து யார் இவர் எனக் கேட்க வைத்தவர் இயக்குனர் ரவி அரசு. அது போலவே அவருடைய இரண்டாவது படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களுடன் கொடுத்து இந்தப் படத்தையும் பேச வைக்கிறார். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர் ஜிவி பிரகாஷ்குமார். நாமக்கல்லில் வசிக்கும் பிரகாஷுக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்வது வழக்கம். அப்படி பல தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார். ஆனால், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனிடையே, அவர்களது ஊரில் ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் காப்பாற்று...

பயணிகள் கவனிக்கவும் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
விதார்த், லட்சுமி நடித்துள்ள பயணிகள் கவனிக்கவும் படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ள பயணிகள் கவனிக்கவும் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான விக்ருதி படத்தின் ரீமேக் தான் விதார்த் நடித்துள்ள பயணிகள் கவனிக்கவும் படம். கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படம், தமிழில் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. விதார்த், லட்சுமி, கருணாகரன் போன்றோர் முக்கிய கதாபபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளியாக உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் துபாயில் இருந்து ஊருக்கு வரும் கருணாகரனுக்கு வீட்டில் பெண்...

ஓ மை டாக் – திரைப்பட விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ள படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ள படம் ஓ மை டாக். மூத்த நடிகர் விஜயகுமாருடைய மகன் அருண்விஜய், அவருடைய பேரன் அர்ணவ் விஜய் ஆகிய மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர். ஊட்டியில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா விஜயகுமார், மனைவி மகிமா நம்பியார், மகன் அர்ணவ் ஆகியோரைக் கொண்ட சிறிய குடும்பம். தங்கள் வசதியை மீறி மகனை உலகத்தரப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைப்பதால் கடன் சிக்கல்.அதனால் சின்னச் சின்னச் சங்கடங்கள் எனப் போய்க்கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்துக்குள் ஒரு நாய்க்குட்டி நுழைகிறது. அதன்பின் நிறைய மாற்றங்கள். அவை என்ன? என்பதைச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ஓ மை டாக். விஜயகுமார் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்பதும் அருண்விஜய் சிறப்பாக நடித்திருக்கிறா...

கே.ஜி.எஃப் 2 திரை விமர்சனம் (ரேடிங் 4.75/5)

Latest News, Review
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் 2 படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யஷ். கே.ஜி.எஃப்-பை பிடிக்க யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார். இறுதியில் எதிரிகளை எதிர்த்து யஷ், கே.ஜி.எஃப்யை தக்க வைத்துக் கொண்டாரா? சஞ்சய் தத்தின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்து இருக்கும் யஷ் தனி ஒருவனாக படத்தை தன்...

பீஸ்ட் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
நடிகர் விஜய்யின் 65வது படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் திரைப்பயணத்தில் 3வதாக இயக்கும் படம் இது. ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பார்த்த இப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய புள்ளியை சிறைபிடிக்க திட்டம் போட்டுள்ளார் வீர ராகவன் விஜய், ஆனால் அதை கைவிடும்படி உத்தரவு வர அதையும் மீறி அங்கு இருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார் விஜய். எதிர்பாராத விதமாக விஜய்க்கு நெருக்கமான குழந்தை இறக்கிறது. இதனால் விஜய் சென்னைக்கு வர அங்கு பூஜாவுடன் காதல் வயப்படுகின்றார். ஒரே வேலையில் பூஜாவுடன் சுற்றி வரும் வீரா ராகவன் வேலை சம்மந்தமாக மாலுக்கு வருகிறார். அங்கு திடீரென தீவிரவாதிகள் மாலில் உள்ள மக்களை சிறை பிடிக்கின்றனர். வீர ராகவனால் கைதான அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க கோரிக்கை வைகின்றனர். அந்த மாலில் உள்ளவர்களை விஜய் காப்பற்றினாரா, தீவி...

ஆர்ஆர்ஆர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ளது ஆர் ஆர் ஆர் திரைப்படம். இந்த திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். 1920-களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனையில் ராஜமவுலியின் கிராபிக்ஸ் கண்களில் விரித்துக் காட்டும் திரைப்படம் RRR. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என ராஜமௌலி எடுத்துக்கொண்ட முயற்சி, இந்த திரைப்படம் இதுவரை இந்திய சினிமா பார்த்திடாத பிரம்மாண்ட திரைப்படமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிகிறது. ராம்சரண் நெருப்பு என்றும் ஜூனியர் என்டிஆர் நீர் என்றும் படத்தில் எடுத்துக்கொண்ட கருப்பொருளை, படம் முழுக்க நேர்த்தியுடன் கையாண்டுள்ளது படம் பார்க்கும் ரச...
வலிமை திரை விமர்சனம் (பிரம்மிப்பு)  Rank 4/5

வலிமை திரை விமர்சனம் (பிரம்மிப்பு) Rank 4/5

Latest News, Review
போனிகபூர் தயாரிப்பில் அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர் நடித்துள்ள படம் வலிமை படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அர்ஜுன் (அஜீத்) ஒரு சிறப்பான காவல்துறை அதிகாரி. குற்றம்செய்பவர்களின் கையை உடைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பணம் உதவிசெய்யும் நல்ல மனம் படைத்தவர். ஆனால், அண்ணன் குடிகாரர். தம்பிக்கு வேலையில்லை. இந்தச் சூழலில் சென்னையில் பெரும் குற்றங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. சங்கிலி பறிப்பு சம்பவங்கள், போதைப் பொருள் தொடர்பான நிகழ்வுகள், கொலைகள் பெரும் எண்ணிக்கையில் நடக்கின்றன. இந்தக் குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு அர்ஜுனுக்கு வழங்கப்படுகிறது. மூன்று குற்றங்களையும் செய்வது ஒரே கும்பல் என்பதைக் கண்டுபிடிக்கிறார் அர்ஜுன். புலனாய்வு முக்கிய கட்டத்தை நெருங்கும்போது ஒரு திருப்பம். அர்ஜுனின் குடும்பமே பெரும் அபாயத்தில் சிக்குகிறது. அர்ஜுன் என்ன செய்கிறார் என்பது மீதிக் ...

அன்சார்ட்டட் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
சோனியின் புகழ்பெற்ற வீடியோ கேம் சீரிஸான 'அன்சார்டட்' அதே பெயரில், அதே கேரக்டர்களுடன் திரைக்கு விருந்தாக வந்துள்ளது. ஆய்வாளர் மெக்கலன் திரட்டிய 500 ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் தங்கப் புதையல், பல ரத்த காவுகளை வாங்கியும் மீட்டெடுக்கப்படாமல் உள்ளது. இந்த தங்கத்துக்கு சரியான வாரிசுகள் தான் என நினைக்கும் சாண்டியாகோ மான்காடா, தனது குடும்ப பாரம்பரியத்தை மீட்க நினைக்கிறார். அதேநேரம் பல பில்லியன்கள் மதிப்புள்ள அந்த தங்கத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது சுல்லி - நேட் - க்ளோயி கூட்டணி. தங்களிடம் இருக்கும் துப்புகளைக் கொண்டு உலகின் மிக பழமையான மர்மங்கள் நிறைந்த அந்தப் புதையலை இரு தரப்பும் எப்படி மீட்கிறது, இதன் பின்னணியில் இருக்கும் சவால்கள் என்ன என்பதை அட்வென்சர் திரைப்படமாக கொடுத்திருப்பதே 'அன்சார்டட்'. "நமது நரம்புகளில் கொள்ளையர்களின் ரத்தம் உள்ளது. நாம் சர் பிரான்சிஸ் டிரேக்கின் வழித்...

வீரபாண்டியபுரம் திரை விமர்சனம் (ரேட்டிங் 2.5/5)

Latest News, Review
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள வீரபாண்டியபுரம் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நாயகி மீனாட்சி இவருக்கும் ஜெயிக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் திருமணம் வரை செல்கிறது. தாலிகட்டும் கடைசி நேரத்தில் மனம் மாறுகிறார் ஜெய். பிறகு ஜெய் மீனாட்சியின் தந்தை சரத்திடம் திருமணத்திற்காக சமரசம் பேசுகிறார். இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்து வருகிறது. இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன? இதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் நின்று போன திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெ...

மகான் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
நடிகர் விக்ரம் நடிப்பில் அமேசான் ப்ரேமில் வெளிவந்த மகான் படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். விக்ரம் சிறு வயதிலிருந்தே ஒரு மகனாக வளர வேண்டும் என அவருடைய தந்தை நினைக்கின்றார், அதற்கு ஏற்றார் போலவே விக்ரமின் குடும்பமும் அமைகிறது. சிம்ரன் விக்ரமின் மனைவி, ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக வர, ஆனால், விக்ரமிற்கு இந்த நேர்மையான வாழ்க்கை துளிக்கூட பிடிக்கவில்லை. ஒருநாள் நமக்கு பிடித்தது போல் வாழ வேண்டும் என்று நினைக்க, வீட்டில் எல்லோரும் திருப்பதி சென்ற நேரத்தில் யதார்த்தமாக பாபி சிம்ஹாவை சந்தித்து குடிக்க ஆரம்பிக்க, அடுத்த நாள் இது சிம்ரனுக்கு தெரிய வருகிறது. உடனே அவரோ ஒரு நாள் குடித்தாலும் உன்னுடன் வாழ மாட்டேன் என்று மகனை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்கு செல்கிறார், அதன் பிறகு விக்ரம் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த விஷயங்களே மீதிக்கதை. விக்ரம் நீண்ட நாட்களுக்கு பிறகு ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்...