Saturday, April 18
Shadow

Tag: ஸ்ரீதர்

இயக்குநர் ஸ்ரீதர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஸ்ரீதர் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர். ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த இளங்கோவனின் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார். ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் என்பதும், அதுவரை பாடகராக மட்டு...

இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜோஷ்வா ஸ்ரீதர் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2004 டிசம்பர் 8 அன்று வெளியான புகழ்பெற்ற படமான காதல் திரைப்படத்தின் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமானார். ஜோஷ்வா ஸ்ரீதர் சென்னையில் 1974 மார்ச் 9 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் சரவணன் மற்றும் இராஜலட்சுமி ஆகியோர் ஆவர். இவர் சென்னையில் உள்ள பாரதிய வித்யாபவனின் இராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியில் 1980 முதல் 1990 வரை பயின்றார். மேனிலைக்கல்வி முடித்தது பின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூசிக்கில் பியானோ வாசிக்கவும் மேற்கத்திய இசையின் நுணுக்கங்களையும் கற்றார். பியானோ படிக்கும்போது அங்கு கித்தார் கற்ற பெண்ணோடு காதல் மலர 19 வயதில் திருமணம்; 20 வயதில் முதல் குழந்தை என வாழ்க்கையின் போக்கு மாறியது. திருமணத்துக்குப்பின் 1993 இல் கிருத்துவ மதத்துக்கு மதம் மாறினார். அதுவரை ஸ்ரீதராக இருந்தவர் ஜோஷ்வா ஸ்ரீதராக மாறினார். 2004 ஆண்...