நடிகர் ஹம்சவர்தன் பிறந்த தின பதிவு
மானசீக காதல் என்ற படத்தில் அறிமுகமானவர் ஹம்சவர்தன். பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகனான இவர், அதைத் தொடர்ந்து புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, இனிது இனிது காதல் இனிது, மந்திரன், பிறகு என பல படங்களில் நடித்தார். தந்தை மற்றும் அண்ணனின் வியாபாரத்தை வியாபாரத்தை கவனிக்க இருந்ததால் படங்களை நடிப்பதை தவிர்த்து வந்தார். அவரின் நடிப்பு ஆர்வம் மீண்டும் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்துள்ளது. ஆகவே மீண்டும் அம்சன் புரொடக்ஷன் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து அதில் இரண்டு படங்கள் நடித்து வருகிறார் அதோடு முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களை வைத்தும் தன் நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
அடுத்த மாதம் இந்த நிறுவனம் மூலம் தான் நடிக்கும் முதல் படத்தை தொடங்கும் ஹம்சவர்தன், சமீபத்தில் ஹிட் கொடுத்த சில இளவட்ட டைரக்டர்களுக்கு அழைப்பு விடுத்து...
