50 % காமெடி 50 % ஆக்ஷன்.யில் உருவாகி இருக்கும் கத்தி சண்டை இம் மாதம் வெளியீடு
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை அக்ஷன், காமெடி , செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி உள்ளோம்.. 50 % காமெடி 50 % ஆக்ஷன். இதுவரை ஆக்ஷன் கதைகளில் நடித்துவந்த விஷால் இந்த படத்தில் காமெடியிலும், ஆக்ஷனிலும், ...