தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன் – அமலா பால் வருத்தம்
இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால், ஒரே வருடத்தில் நீதிமன்ற வாசலில் நின்றார் விவாகரத்துகாக.
தற்போது, திருமண வாழ்க்கையை உதறிவிட்டு சினிமா வாழ்க்கையில் மும்முரம் காட்டி வரும் அமலா பால், தனது விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார்.
சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அமலா பால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
வாழ்க்கை புதிதாக ஆரம்பித்ததுபோல உணர்கிறேன். 18 வயதில் சினிமாவில் அறிமுகமானேன். 23 வயதில் திருமணம் செய்தேன். 24 வயதில் இருவரும் பிரிந்துள்ளோம். எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லை. எனவே என் தவறுகள் மூலமாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். பிரிவுக்குப் பிறகு நான் நிறைய அழுதேன். கடைசியில் இவற்றை என் அனுபவமாக எண்ணிக் கொள்கிறேன்.
இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன். எப்போதும் அந்தக் காதல் இருக்கும். அவர் எப்போதும் எனக்கு ஸ்பெஷல் மனிதர்தான். அதேசமயம் பிர...
