தீபாவளி கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘மரகத நாணயம் 2’ – வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
தீபாவளி கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘மரகத நாணயம் 2’ – வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை, நகைச்சுவை மற்றும் கற்பனை கலந்த சாகசப் படமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ‘மரகத நாணயம் 2’ படத்தின் முதல் பார்வையைப் படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தளித்துள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக்களம், குறும்புத்தனமான ஆவிகள், மர்மங்கள், நகைச்சுவை மற்றும் சாகசக் காட்சிகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த இப்படம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான...
