ஜாக்கி சான் ஹீரோயினை தன்வசப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் `நாச்சியார்' படம் திரையரங்குகளிர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கறது. அத்துடன் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமாக இருக்கின்றன. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக ‘ஐங்கரன்’ வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘ரெட்ட கொம்பு’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
பேண்டஸி காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி கேமராவில் படமாக்கப்படுவதாகவும், இந்த படத்துக்கு 3டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில், ஜி.வி.பிராகாஷ் ஜோடியாக அமைரா தஸ்தூர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தனுஷின் `அனேகன்' படத்திற்கு பிறகு தம...