லாரி கொள்ளை , தமிழ் நாட்டை மிரட்டி வரும் தீரன் அதிகாரம் ஒன்று வில்லன் அபிமன்யு சிங் பேட்டி !
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை.
இதோ மிரட்டல் வில்லன் அபிமன்யு சிங் பேட்டி :- இயக்குநர் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த கதையில் அவ்வளவு அறிவுபூர்வமான விஷயங்கள் இருந்தது. என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நடிகர் கார்த்தியை பற்றி பேசும் போது , கார்த்தி மிகசிறந்த மனிதர். அவர் எப்போதும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக தெளிவாகவும் , முழு கவனத்தோடும் செய்யக்கூடியவர். காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார...
