ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் அபி சரவணன்!
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்ட அபி சரவணனின் பேட்டி...
தூத்துகுடியில் நாற்பத்திஎட்டு நாட்களாக போராடி கொண்டிருக்கும் எமது மக்களை காண #JOINTFORCARE TEAM தூத்துகுடி பயணமானோம்... நமது குழுவை சார்ந்த செலவம் ராமசாமி மற்றும் நண்பர்கள் கணேஷ் மலைராசாவுடன் தேவையான உணவுபொருட்களான பிஸ்கட் பிரட் பழங்கள் போன்றவற்றை வாங்கி கொண்டு சென்றோம் . பிரிடடிஷ் பேக்கரி உரிமையாளர் பிரட்களுக்கு பணம் வாங்க மறுத்துவிட்டார்...
செல்லும்வழியில் காரின் கண்ணாடிகதவுகளை இறக்கிவிட்டு சென்றபோது ஸ்டெர்லைட் பணியை நிறுத்தி இரு நாட்களாகியும் காற்றின் நெடி கண்களில் எரிச்சலையும், தொண்டை நமச்சலையும் இரண்டு நிமிடங்களில் பரிசளித்தது எனில் இருபத்திஇரண்டு வருடங்கள் இந்த மக்களின் வாழ்க்கை?
போராட்டகளத்தை அடைந்தபோது ஒரு வேம்பு மரத்தின் கீழ் மக்கள் அமர்ந்திருந்தனர்...ஸ்டெரலைட் எதிரான போராட்டத்தில் அவர்களுடன் ந...
