சுதந்திரமே ஒரு கலைஞனுக்கான மிகப்பெரிய ஆதரவு: மீசைய முறுக்கு 2 வெற்றி விழாவில் பேசிய நாயகனும் இயக்குனருமான – ஆதி
சுதந்திரமே ஒரு கலைஞனுக்கான மிகப்பெரிய ஆதரவு: மீசைய முறுக்கு 2 வெற்றி விழாவில் பேசிய நாயகனும் இயக்குனருமான - ஆதி
சென்னை: ஒரு கலைஞனின் படைப்பில் தலையிடாமல் முழுமையான சுதந்திரம் அளிப்பதே அவருக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு என்று நடிகரும் இயக்குநருமான ஆதி தெரிவித்துள்ளார்.
மீசையை முறுக்கு 2 படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், படத்தின் உருவாக்கம், தனக்குக் கிடைத்த படைப்புச் சுதந்திரம், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தனது படைப்புப் பயணத்தில் இயக்குநர் சுந்தர்.சி அளித்த ஆதரவை நினைவுகூர்ந்த ஆதி, மீசையை முறுக்கு 2 படத்தை உருவாக்கும்போது அவர் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றார்.
“இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும், திரைக்கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவ...
