அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் ஆயுதமாக்கி எழும் கே. மணிகண்டன்! – ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல் ‘IGNORE’ வெளியீடு!
அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் ஆயுதமாக்கி எழும் கே. மணிகண்டன்! – ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல் ‘IGNORE’ வெளியீடு!
**யோகி பி, அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா குரலில் அதிரடி ராப் பாடல் – டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘மக்கள் காவலன்’!**
ஒரு மனிதனைத் தொடர்ந்து புறக்கணிப்புகளும் அவமானங்களும் சூழ்ந்தால், அவன் முடங்கிப் போக வேண்டுமா? அல்லது அந்த அவமானங்களையே தனது பலமாக மாற்றிக்கொண்டு எதிர்த்து நிற்க வேண்டுமா? இத்தகைய அழுத்தமான கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகும் ‘மக்கள் காவலன்’.
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘IGNORE’ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘குட்ஃபாதர் ஆஃப் தமிழ் ஹிப்-ஹாப்’ என்று ரசிகர...

