சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’
`காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் `செக்க சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளத்தில் சில தகவல்கள் கசிந்திருக்கின்றன.
விஜய் சேதுபதி போலீசாக நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
இந்நிலையில், சிம்பு, அரவிந்த் சாமி மற்றும் அருண்விஜய்யின் கதாபாத்திரம் குறித்த ஒரு பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், அருண் விஜய் கோவக்காரராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.
மற்றொரு தகவலின்படி படத்தில் இந்த 4 பேரும் அண்ணன், தம்பிகளாக நடிப்பதாக ஒரு தகவலும் சமீபத்தில் உலா வந்தது. மேலும் இந்த படம் தொழிற்சாலை மாசை மையப்படுத்தி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது.
ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்ற...