
மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கு `செக்க சிவந்த வானம்’ என்று தலபை்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி உள்ளிட்ட பலரும் நடிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. அதில் பகத் பாஷிலுக்கு பதில் நடிகர் அருண் விஜய் படக்குழுவில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.