1970-களின் சென்னையை உயிர்ப்பிக்கும் ரோமியோ பிக்சர்ஸ்! ஆகாஷ் முரளி நாயகனாக புதிய பிரம்மாண்ட படம் தொடக்கம்
1970-களின் சென்னையை உயிர்ப்பிக்கும் ரோமியோ பிக்சர்ஸ்! ஆகாஷ் முரளி நாயகனாக புதிய பிரம்மாண்ட படம் தொடக்கம்
தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் ஹெச். வினோத்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
...
