தல 60 படத்தை இயக்குகிறாரா ஹெச்.வினோத்?
நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் சூட்டிங் திட்டமிட்டபடி நிறைவு பெற்றது, தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் இயக்குனர் ஹெச் வினோத், அஜித் மற்றும் போனிகபூர் ஆகியோருடன் அடுத்த படத்தில் இணைவர் என்று தெரிய வந்துள்ளது.
'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் இயக்குனர் ஹெச் வினோத்தால் இயக்கப்பட்டது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் போனிகபூர் இன்னும் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்த போதும், இயக்குனர் வினோத், அஜித் உடன் இரண்டு படத்தில் பணியாற்ற கையெழுத்திட்டு உள்ளதாக புரளி பரவி வருகிறது.
சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹெச் வினோத், பின்னர் தீரன் அதிகாரமா ஒன்று மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். இதை தொடர்ந்து தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் அஜித் வழக்கறிஞராக ந...