நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சூட்டிங் திட்டமிட்டபடி நிறைவு பெற்றது, தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் இயக்குனர் ஹெச் வினோத், அஜித் மற்றும் போனிகபூர் ஆகியோருடன் அடுத்த படத்தில் இணைவர் என்று தெரிய வந்துள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இயக்குனர் ஹெச் வினோத்தால் இயக்கப்பட்டது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் போனிகபூர் இன்னும் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்த போதும், இயக்குனர் வினோத், அஜித் உடன் இரண்டு படத்தில் பணியாற்ற கையெழுத்திட்டு உள்ளதாக புரளி பரவி வருகிறது.
சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹெச் வினோத், பின்னர் தீரன் அதிகாரமா ஒன்று மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். இதை தொடர்ந்து தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழில் முதல் படமாகும். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு, ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேர்கொண்ட பார்வை பிங்க் படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரீமேக் என்று தெரிந்தும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் நீதிமன்றத்தில் தீயாக வாதாடும் காட்சியை காணும் ஆவல் அதிகரித்துள்ளது.