இலியானாவை பார்த்து கொந்தளிக்கும் சக நடிகைகள்
லுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இலியானா. அப்பொழுதே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கிய அவர் திடீர் என்று மூட்டையை கட்டிக் கொண்டு பாலிவுட்டுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். டோலிவுட் போன்று பாலிவுட்டில் அவரால் ஜொலிக்க முடியவில்லை ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் ரவி தேஜா நடித்துள்ள அமர் அக்பர் அந்தோணி படம் மூலம் இலியானா டோலிவுட்டுக்கு திரும்பி வந்துள்ளார். 6 ஆண்டுகள் கழித்து அவர் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த தெலுங்கு படத்தின் ஹீரோவும் ரவி தேஜா தான். முன்னதாக அவர்கள் 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமர் அக்பர் அந்தோணி படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம். தெலுங்கு படங்களில் நடிக்காவிட்டாலும் இலியானாவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் ரசிகர்கள் அதிகம். அதனால் தான் அவருக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்...
