அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!
திருவள்ளூர்: இந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று அவருக்கு விழா எடுத்து கவுரவித்தனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் வடமதுரை கண்டிகை பகுதியில் இன்று அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், தளபதி செல்வம், பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நடிகர் ...
