சீமராஜா படத்தின் புதிய யுக்தியை கையாலும் தயாரிப்பாளர் R.D.ராஜா
பலருக்கு மற்றோர் போட்ட பாதையில் பயணிப்பது பலம். ஒரு சிலருக்கே தங்களுக்கென்ற பாதையை நிர்மானிக்கும் பலம் உண்டு. அந்த சிலரில் முன்னோடியாக இருப்பவர் 24 A M ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர் டி ராஜா. அவருடைய முந்தைய படங்களின் வசூல் சாதனையை தன்னுடைய அடுத்த படம் உடைக்க வேண்டும் என்பதில் தீர்ர்மானமாக உள்ள இவர் , விளம்பர யுத்திகளிலும் ஓவ்வொரு படத்திலும் புதிய யுத்தியை கையாளுவது என்பதில் பிடிவாதமாக இருப்பார். திரை உலகினரும், ரசிகர்களும் இவர் தன்னுடைய அடுத்த படத்துக்கு என்ன யுத்தி உபயோகிப்பார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பர்.
இவருடைய அடுத்த பிரமாண்டமான தயாரிப்பு "சீமராஜா". சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், லால், சிம்ரன், மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்க , டி இமான் இசை அமைப்பில், பொன் ராம் இயக்கத்தில், உருவாகும் இந்த ஜனரஞ்சகமான படைப்பு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயக சதுர்த்...
