எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று ‘அறம்
எந்த ஒரு தரமான கதையையும் மேலும் மெருகேத்தி அதன் தீவிரத்தை கூட்டுவதற்கு அக்கதையை படமாக்கும் விதமும் , உபயோகப்படுத்தப்படும் ஒளிப்பதிவு நுட்பங்களும் முக்கியமான பங்கு வகிக்கும். மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் என எல்லா தரப்பினரிடையும் பேராதரவு பெற்றுள்ள 'அறம்' படத்தின் எல்லா தொழில்நுட்ப அம்சங்களும் பாராட்டுக்களை பெற்று வருகின்றன. இப்படத்தில் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவை பாராட்டாதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம். இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார்.
'அறம்' குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பேசுகையில் , '' எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று 'அறம்'. இப்படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே, அழிந்து வரும் நமது பூமியின் அவல நிலையை சித்தரிக்க ' க்ரே ' கலரை பயன்படுத்தி , அதற்கான லைட்டிங்கை கொடுத்து, சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என ...
