ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய கதையில் அரவிந்த்சாமி
மம்முட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தை தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளின் ரீ-மேக்கையும் நானே இயக்கவிருப்பதாகவும், நயன்தாரா நாயகியாக நடிப்பார், நாயகர்கள் மட்டும் மாறுவார்கள் என்று இயக்குநர் சித்திக் கூறி இருந்தார்.
தமிழில் மம்முட்டி கதாபாத்திரத்தில் ரஜினி, அஜித் உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ரஜினி இப்படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாக நிலவி வந்த இப்படத்தின் சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. சித்திக் இயக்கவிருக்கும் இப்படத்தின் நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வ...
