இயக்குநர் செல்வா இயக்கத்தில் “ அரவிந்த் சாமி “ – “ ரித்திகா சிங் “ நடிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது
மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “ மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 “ .அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. மேலும் இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா , சாந்தினி , ஹாசினி , ஹரிஷ் உத்தமன் , ராஜ் கபூர் , நாகி நீடு , ரமேஷ் பண்டிட் OAK. சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஆண்டனி , கலை சிவா யாதவ்...
