
“தனி ஒருவன்” நடிகர் அரவிந்த்சாமி பிறந்த தினம் அவரை பற்றி சில வரிகள்
தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
அவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.
இவர் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் ...