
தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
அவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.

இவர் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.
இவர் 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவர் நடித்த படங்கள்
தளபதி, ரோஜா, மறுபடியும், டாடி, பாசமலர்கள், பம்பாய், மௌனம், இந்திரா, தேவராகம், சாத் ரங் கே சப்னே, மின்சார கனவு, புதையல், என் சுவாசக் காற்றே, அலைபாயுதே, ராஜா கோ ராணி சே பியார் ஹோ, கயா, சாசனம், கடல், தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், கடல், வணங்காமுடி, நரகாசுரன், சதுரங்க வேட்டை 2, செக்க சிவந்த வானம், நவாப், துருவா, டியர் டாட், இனம்
இவர் பாடிய பாடல் இடம் பெற்ற படங்கள்
தமிழில் வெளியான இருவர், கன்னடத்தில் வெளியான டீன்ஏஜ்
