மீ டூ பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் அர்ஜுன்
திரையுலகை சேர்ந்த நடிகைகள் உள்ளிட்ட பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை மீ டூ மூலமாக பகிர்ந்து வருகின்றனர். இதில் இப்போது லேட்டஸ்டாக சிக்கியிருப்பவர் ஆக்சன் கிங் எனப்படும் நடிகர் அர்ஜுன்.. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இவர் நிபுணன் படத்தில் அர்ஜுனின் மனைவியாக நடித்தவர்.
இதுபற்றி சமூகவலைதளத்தில் விரிவாக பகிர்ந்துள்ள ஸ்ருதி ஹரிஹரன், “நிபுணன் படத்தில் அர்ஜுனின் மனைவியாக நடித்தேன். அர்ஜுனின் படங்களை பார்த்து அவருடன் இணைந்து நடிக்கப்போகிறேன் என ஆவலாக இருந்தேன். சில நாட்கள் படப்பிடிப்பு நன்றாகத்தான் போனது. ஒருநாள் நீளமான வசனங்களை பேசிவிட்டு நாங்கள் இருவரும் கட்டியணைக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது.
இதற்காக ரிகர்சல் செய்தபோது வசனங்களை பேசி முடித்தபின், நான் சற்றும் எதிர்பாராத விதமாக தொடக்கூடாத இடங்களில் தொட்டு, அப்படியே அவர...
