“என் திரையுலக கனவை பூர்த்தி செய்த தேவதை, சைத்தான்” என்கிறார் அருந்ததி நாயர்
நடிப்பு தான் உலகம், நடிப்பு தான் வாழ்க்கை என்று ஒரு நடிப்பு வெறி கொண்ட சைத்தானாகவே மாறி இருக்கும் விஜய் ஆண்டனியோடு இணைந்து பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு கடின உழைப்பும், முழு அர்ப்பணிப்பும் தேவை. அந்த குணங்களோடு சைத்தான் திரைப்படத்தில் களம் இறங்கி, தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், கேரளாவில் இருந்து உதயமாகி இருக்கும் கதாநாயகி அருந்ததி நாயர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து, சைக்கோலாஜிக்கல் - திரில்லர் பாணியில் அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கும் சைத்தான் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.
"மனித வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு 'சைத்தான்' னை வரவேற்க ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் ...
