‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவு… இரட்டை மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் – இயக்குநர் எம். கார்த்திகேசன்!
'அறுவடை' படப்பிடிப்பு நிறைவு... இரட்டை மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் - இயக்குநர் எம். கார்த்திகேசன்!
கிராமிய வாழ்க்கையின் மண்வாசனையையும், சமூகப் பொறுப்புணர்வையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'அறுவடை' திரைப்படம் தனது படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்துடன், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் கதாநாயகனுமான எம். கார்த்திகேசன் தனது பிறந்தநாளையும் கொண்டாடியிருப்பது அவருக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எம்.கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், தயாரிப்பாளராக அறிமுகமான எம். கார்த்திகேசனின் இரண்டாவது தயாரிப்பாகும். இதற்கு முன் அவர் தயாரித்த 'லாரா' திரைப்படம் கவனம் பெற்ற நிலையில், தற்போது இயக்குநராகவும் தனது புதிய பயணத்தை 'அறுவடை' மூலம் தொடங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் எம். கார்த்திகேசனே கதாநாயகனாக நடித்துள்ள...

