சென்சார் குழு பாராட்டிய அருவி திரைப்படம்
அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு , நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட் , கலை இயக்குநர் சிட்டிபாபு , நடிகர்கள் ஸ்வேதா சேகர் , அஞ்சலி வரதன் , மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது :- இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. ஏன் ?? என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது.
அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும்...
