
இன்று தயாரிப்பாளர் சங்கப்பொதுக்குழு கூட்டம் நடைபெறாது: தனி அதிகாரி அதிரடி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே நிர்வாகிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது. இதனை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தனி அதிகாரி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் 26.01.2019 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்க தனி அலுவலர் பொறுப்பேற்றுள்ள நிலையில் முன்னாள் நிர்வாகிகளால் 01.05.2019 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த சங்கப்பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு வழிவகையில்லை என்ற விவரம் இதன்மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது" என்று அதில் கூறியுள்ளார்....