80 ஆண்டுகால திரைப்பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்… ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ திறப்பு
80 ஆண்டுகால திரைப்பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்... ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட 'ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்' திறப்பு!
சென்னை:
இந்திய திரையுலகின் வளர்ச்சிப் பயணத்துடன் ஒன்றிணைந்து எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக வரலாறு படைத்து வரும் ஏவிஎம் ஸ்டூடியோஸ், தனது பாரம்பரியத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 'ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்'-ஐ திறந்து வைத்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பில் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் வளர்ச்சியில் பல முக்கிய மைல்கற்களை உருவாக்கிய நிறுவனமாக ஏவிஎம் திகழ்கிறது. இதுவரை 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் சீரிஸ் தயாரித்துள்ள இந்த நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், வங்காளம் மற்றும் சிங்களம் என ஆறு மொழிகளில் தனது படைப்புகளை வழங்கியுள்ளது.
பிளேபேக் பாடல் முறையை ...
