
80 ஆண்டுகால திரைப்பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்… ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ திறப்பு!
சென்னை:
இந்திய திரையுலகின் வளர்ச்சிப் பயணத்துடன் ஒன்றிணைந்து எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக வரலாறு படைத்து வரும் ஏவிஎம் ஸ்டூடியோஸ், தனது பாரம்பரியத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’-ஐ திறந்து வைத்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பில் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் வளர்ச்சியில் பல முக்கிய மைல்கற்களை உருவாக்கிய நிறுவனமாக ஏவிஎம் திகழ்கிறது. இதுவரை 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் சீரிஸ் தயாரித்துள்ள இந்த நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், வங்காளம் மற்றும் சிங்களம் என ஆறு மொழிகளில் தனது படைப்புகளை வழங்கியுள்ளது.
பிளேபேக் பாடல் முறையை அறிமுகப்படுத்தியது முதல், பாடல்கள் இல்லாத திரைப்படம், தேசிய விருது பெற்ற படங்கள், நேரடி காட்சிகளுடன் அனிமேஷன் தொழில்நுட்பத்தை இணைத்த திரைப்படம், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியான இந்தியாவின் முதல் படம் என இந்திய சினிமாவின் பல முக்கிய சாதனைகளுக்குப் பின்னணியாக ஏவிஎம் இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி. ராமாராவ், ஜெ. ஜெயலலிதா மற்றும் சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட பின்னாளில் முதலமைச்சர்களாக உயர்ந்த ஆறு முக்கிய தலைவர்களுடன் பணியாற்றிய பெருமையையும் ஏவிஎம் பெற்றுள்ளது.
2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம், நிறுவனத்தின் அரிய திரைப்பட வரலாறு, ஆவணங்கள் மற்றும் பழமையான வாகனங்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த பாரம்பரியப் பயணத்தின் தொடர்ச்சியாக தற்போது திறக்கப்பட்டுள்ள ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர், திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், நிச்சயதார்த்தங்கள், நிறுவன மாநாடுகள், திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கென தனித்தனி நவீன சமையலறைகள், விசாலமான அரங்குகள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், சென்னை நகரின் முக்கிய நிகழ்வு அரங்குகளில் ஒன்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சியின் மூலம், திரைப்படத் துறையில் மட்டுமல்லாமல், சமூக மற்றும் தொழில்துறை நிகழ்வுகளுக்கான சிறந்த தளத்தையும் உருவாக்கும் நோக்கில் ஏவிஎம் தனது அடுத்த கட்ட வளர்ச்சிப் பயணத்தை தொடங்கியுள்ளது. இந்திய சினிமாவின் பாரம்பரியத்தையும், நவீன வசதிகளையும் ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, ஏவிஎம் ஸ்டூடியோஸின் வரலாற்றில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

AVM Studios Opens State-of-the-Art Convention Centre, Adding a New Chapter to Its 80-Year Legacy
Chennai: One of India’s most iconic film production houses, AVM Studios, has expanded its legacy beyond filmmaking with the launch of the AVM Convention Centre, a modern event venue located within the historic AVM Studios campus in Chennai.
For over eight decades, AVM Studios has remained a pioneering force in Indian cinema. The production house has created an enduring legacy by producing 179 feature films, 55 television serials, and one web series across six languages—Tamil, Telugu, Hindi, Kannada, Bengali, and Sinhala.
Over the years, AVM has been at the forefront of several landmark achievements in Indian cinema. From introducing playback singing and pioneering technological innovations to producing award-winning classics and setting new standards in filmmaking, the studio has consistently shaped the evolution of the Indian film industry.
AVM also holds the unique distinction of having collaborated with six personalities who later went on to serve as Chief Ministers, including C.N. Annadurai, M. Karunanidhi, M.G. Ramachandran, N.T. Rama Rao, J. Jayalalithaa, and C. Joseph Vijay, reflecting the studio’s remarkable association with some of the country’s most influential figures.
In 2023, the company further strengthened its commitment to preserving cinema history by opening the AVM Heritage Museum, showcasing rare film memorabilia, archival treasures, and an impressive collection of vintage automobiles that celebrate the studio’s rich cinematic journey.
Continuing this tradition of innovation and excellence, AVM has now introduced the AVM Convention Centre, a versatile venue designed to host corporate meetings, conventions, film audio launches, weddings, receptions, engagement ceremonies, cultural programmes, and a wide range of social events.
The facility features spacious halls, modern infrastructure, advanced event amenities, and separate state-of-the-art kitchens for vegetarian and non-vegetarian catering, ensuring a seamless experience for every occasion.
With the inauguration of the AVM Convention Centre, AVM Studios marks another significant milestone in its illustrious history, reinforcing its commitment to creating world-class spaces while preserving one of India’s richest cinematic legacies. The new venue is expected to become one of Chennai’s premier destinations for both corporate and social events.
