Wednesday, October 28
Shadow

Tag: #ayyanarveethi #yuvan #ukmurali #sarashetty #singampuli #ponvannan #bhakyaraj

அய்யனார் வீதி – திரை விமர்சனம்

அய்யனார் வீதி – திரை விமர்சனம்

Review, Shooting Spot News & Gallerys
கே.பாக்யராஜ், பொன்வண்ணன் யுவன், சாராஷெட்டி, சிஞ்சு மோகன், சிங்கம்புலி, செந்தில்வேல், மீரா கிருஷ்ணன், முத்துக்காளை நடித்துள்ளனர். ஒளிப்பதிவு--சக்திவேல், இசை-- யுகே.முரளி, இயக்கம் -ஜிப்ஸி என்.ராஜ்குமார். தயாரிப்பு ஸ்ரீசாய் சண்முகம் பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜயசங்கர். தலைமுறைகளின் பகை பற்றிய கதை. அந்த ஊரில் மரியாதையும் கௌரவமும் உள்ள குடும்பம் ஜமீன் அய்யனார் குடும்பம். ஒருகாலத்தில் அய்யனார் அப்பாவின் உறவினரான மச்சானே அந்த ஊரில் சாராயம் காய்ச்ச, அதைக் குடித்து அந்தக் கிராமத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அய்யனார் அப்பாவான பெரிய ஜமீன் இதைக் கேள்விப்பட்டதும் அவனைத் தண்டிக்கச் சொல்கிறார். ஊர்மக்கள் அடித்தே கொன்று விடுகிறார்கள். இதனால் குடும்பப் பகை வருகிறது .சாராயம் காய்ச்சிய குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைக்கிறார்கள். அடுத்த தலைமுறையிலும் இது பகையாகத் தொடர்கிறது.அய்யனாருக்கு...