பைரவா படப்பிடிப்பு நிறைவு பெற்றது..
எங்க வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான நாகி ரெட்டியின் நல்லாசியுடன் B. வெங்கட்ராம ரெட்டி வழங்க விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடித்திருக்கும் “பைரவா “ படத்தின் படப்பிடிப்பு .29.11.2016 நேற்று “ பூசணிக்காய் “ உடைப்புடன் இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் இளையதளபதி விஜய் , தயாரிப்பாளர் B .வெங்கட்ராம ரெட்டி , B. பாரதி ரெட்டி , இயக்குநர் பரதன் , ஒளிப்பதிவாளர் சுகுமார்,எடிட்டர் பிரவீன் ,கலை இயக்குனர் பிரபாகரன் தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன்,முதன்மை நிர்வாகி குமரன் மற்றும் படகுழுவினருடன் “ பைரவா “ திரைப்படத்தை தமிழ் நாடு முழுவதும் வெளியிடும் ஸ்ரீ கிரீன் புரொடக்க்ஷன்ஸ் சரவணன் ஆகியோர் கலந்...
