25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரபுதேவா – வடிவேலு கூட்டணி… “பேங் பேங்” படப்பிடிப்பு நிறைவு!
25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரபுதேவா - வடிவேலு கூட்டணி… “பேங் பேங்” படப்பிடிப்பு நிறைவு!
KRG கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபுதேவாவும், வைகைப் புயல் வடிவேலுவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால், இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜோம்பி பின்னணியுடன் உருவாகும் இந்த திரைப்படம், காமெடி, ஆக்ஷன், ஹாரர் ஆகிய அம்சங்களை இணைத்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வருகிறது. குறிப்பாக பிரபுதேவாவின் திரைநடையும், வடிவேலுவின் நகைச்சுவை டைமிங்கும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.
படத்தின் முக்கிய கட்டப்படப்பிடிப்புகள் இந்தியாவைத் தாண்டி மலேசியாவிலும் நடைபெற்றுள்ளன. அங்கு சுமார் 10 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்ப...
