பாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம் (நகைசுவை கலாட்டா)
பாஸ்கர் ஒரு ராஸ்கல் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்துள்ள ஒரு படம் மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் இதில் மம்முட்டி நயன்தார மற்றும் பலர் நடித்தனர் இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் வசூலில் சாதனை புரிந்த ஒரு படம் இப்போது இந்த படம் தமிழில் அரவிந்த்சாமி அமலாபால்,பேபி நைநிகா,மாஸ்டர் ராகவ், சூரி ரமேஷ்கண்ணா,ரோபோ சங்கர், மற்றும் பலர் நடிப்பில் அம்ரேஷ் கணேஷ் இசையில் சித்திக் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தமிழில் சாதிக்குமா என்பதை பார்ப்போம்.
வசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதிகம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதற்கு ஏற்றாற்போல் அடிதடியுடன் பட்டையை கிளப்புவார். ஆனால், ம...

