
ஒரே நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற பட்ட ஓவியா
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.
ஓவியா சிறப்பு விருந்தினராக உள்ளே சென்றிருந்தார். ஆனால் மற்ற போட்டியாளர்களுக்கு ஓவியா சிறப்பு விருந்தினர் என்பது தெரியாது. ஓவியாவும் ஒரு போட்டியாளர் போலவே உள்ளே அனுப்பப்பட்டார்.
உள்ளே சென்ற ஓவியா தன்னுடன் ஒரே ஒரு லக்கேஜ் பேக் மட்டுமே வைத்திருந்ததால் மஹத் மற்றும் சில போட்டியாளர்களுக்கு சந்தேகம் வர உடனே ஓவியாவின் பேக்கை ஓபன் செய்து பார்த்ததும் அதில் வெறும் வாட்டர் பாட்டில்கள் மட்டுமே இருந்தது.
மேலும் ஓவியாவால் தான் ஒரு போட்டியாளர் போல நடிக்க தெரியாமல் உள்ளே சென்ற உடனே மாட்டி கொண்டார். இதனையடுத்து ஓவியாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். எல்லோருக்கும் ஒரு சில அட்வைஸ் கொடுத்து விட்டு உங்...