பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னை அவமானபடுத்தி திட்டமிட்டு வேளியேற்றி விட்டனர் சரவணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டதாக மீராமிதுன் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து போட்டியாளர்கள் மத்தியில் உரையாடினார் கமல்ஹாசன். அப்போது பேசிய சரவணன், தனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களை உரசியதாக வெளிப்படையாக கூறினார்.
இந்த விவகாரத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. பின்னணிப் பாடகி சின்மயி இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். இதையடுத்து சரவணனை மன்னிப்பு கோரும்படி பிக்பாஸ் கூறினார்.
அப்போது கன்பெஷன் ரூமில் பேசிய சரவணன், "கல்லூரியில் படிக்கும் போது நான் செய்த தவறுகள் பற்றி பேசினேன். அதுபோல யாரும் செய்யாதீர்கள் என சொல்வதற்காகத்தான் அதை சொன்னேன். ஆனால் அப்போது என்னால் முழுவதுமாக பேச முடியவில்லை. இந்த தருணத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார். இதையடுத்து இந்தவிவகார...