
தடகள விளையாட்டு வீராக களம் இறங்கும் ஆதி
ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்து வரும் நடிகர் ஆதியின் கதை தேர்வு பாணி அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. டிராமா, திரில்லர், ஃபேண்டஸி என அனைத்த் வகை திரைப்படங்களிலும் தனது மகத்தான நடிப்பால் நட்சத்திரமாக பிரகாசித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
"நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்த கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரை சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன, இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்த படத்தில் அவ...