சொல்லிவிடவா – திரை விமர்சனம்(சொல்லவே இல்லை) (2/5)
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகன் சந்தன் குமார். சதீஷும், பிளாக் பாண்டியும் அதே கம்பெனியில், கேமரா மேனாக பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கு உதவியாளராக யோகி பாபு வருகிறார்.
ஐஸ்வர்யா, அவளது தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கு பாதுகாவலராக சுஹாசினி வருகிறார். சுஹாசினியின் மகனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கார்கில் போர் நடக்கிறது. போரை நேரில் படம் பிடிப்பதற்காக இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக சந்தன் குமாரும், ஐஸ்வர்யாவும் டெல்லி செல்கிறார்கள்.
இவர்கள் இருவரும் தன்னுடைய உதவியாளர்களிடம் பொய் சொல்லி அழைத்து செல்கிறார்கள். டெல்லி சென்ற பின் உண்மை தெரிந்து சதீஷ், பிளாக் பாண்டி...